Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
தாறுமாறாக ரெடியாகும் மாஸ்டர் ட்ரைலர்? எப்போ வெளியாகப்போகிறது தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் JD என்ற கல்லூரி ஆசிரியர் ரோலில் தளபதி விஜய் நடித்துள்ளார். பக்கா மாஸ் கமெர்ஷியல் ஆக்ஷன் படம். இதனை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் ஒரு காட்சியில் நடித்துள்ளார் என தெரிகிறது. மேலும் விஜய் சேதுபதி, மகேந்திரன், சாந்தனு, ஆண்ட்ரியா, சஞ்சீவி, ஸ்ரீமன், ஸ்ரீநாத், தீனா, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ் என பலர் நடித்துள்ளனர்.
சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு, அனிருத் இசை மற்றும் ஸ்டண்ட் சில்வா சண்டைக்காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொங்கலுக்கு ரிலீஸாக மாஸ்டர் வருவார் என கோலிவுட்டில் கிசு கிசுத்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் டீஸர் வெளியான உடன் இது கமலின் நம்மவர் ஸ்டைலில் உள்ளது, மம்முட்டியின் மலையாள பட சாயல் தெரிகிறது என்றெல்லம் பேசி வருகின்றனர். இதனை தவிடு போடி ஆக்கும் வகையில் இருக்குமாம் ட்ரைலர் கட்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று ட்ரைலர் வெளியாகும் என்கின்றனர் கோலிவுட் பட்சிகள். எனினும் ட்ரைலர், பட ரிலீஸ் பற்றி அதிகாரபூர்வ தகவல் இல்லை.

master
