அனல் பறக்க வெளியான விஜய்யின் மாஸ்டர் தெலுங்கு டீசர்.. அக்கட தேசத்திலும் பறக்கும் தளபதி கொடி!

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சாந்தனு, அர்ஜுன் தாஸ் போன்ற நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக விஜய் பாடிய “குட்டி ஸ்டோரி” எனும் பாடல் பட்டி தொட்டி வரைக்கும் சென்றடைந்தது.

அதுமட்டுமில்லாமல் “வாத்தி கம்மிங் மற்றும் குயிட் பண்ணுடா” போன்ற பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. என்னதான் பாடல்கள் வரவேற்பை பெற்றாலும் படத்தை பொங்கலுக்கு திரையில் காண விஜய் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அதற்கான வேலைகளில் படக்குழு தற்போது களமிறங்கியுள்ளது. சமீபத்தில் தமிழில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் தெலுங்கு டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே விஜய்யின் தெலுங்கு மார்க்கெட் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மாஸ்டர் படம் இன்னும் ஒருபடி மேல் சென்று வசூலை வாரிக் குவிக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

மாஸ்டர் படத்தின் தெலுங்கு உரிமையை பிகில் படத்தை வாங்கிய ஈஸ்ட் கோஸ்ட் நிறுவனம்தான் வாங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.