Tamil Cinema News | சினிமா செய்திகள்
நம்மவர் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மாஸ்டரில் காப்பியடித்த லோகேஷ்.. போட்டோவுடன் புட்டு புட்டு வைத்த நெட்டிசன்கள்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இணையத்தில் செம வைரல் ஆகி விட்டது.
ஆனால் உண்மையில் டீசரில் வந்த ஒவ்வொரு காட்சிகளும் பல வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு படத்தில் பார்த்ததை போலவே நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது தெரியும். இதற்கு முன்னர் இயக்கிய மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களை எடுக்க கமலின் பழைய படங்கள்தான் உதவியது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் மாஸ்டர் டீசரில் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் ஏற்கனவே கமல் நடிப்பில் வெளிவந்த நம்மவர் படத்தின் காட்சிகளை அப்படியே நினைவூட்டுகிறது.
கமல் கேரக்டரில் விஜய், கௌதமி கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன், காலேஜில் நடக்கும் கலவரம், அதை அடக்கி ஒடுக்கும் ஹீரோ என அனைத்துமே நம்மவர் படத்தின் அப்பட்டமான காட்சிகள் தான்.
இருந்தாலும் விஜய் சேதுபதி என்ற ஒரு கதாபாத்திரம் இருப்பதால் படம் பாதி நம்மவர் என்பதை மட்டும் தற்போதைக்கு உறுதி செய்து கொள்ளலாம்.
மீதி பாதி எந்த படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதை நெட்டிசன்கள் படம் வெளியான அடுத்த காட்சியிலேயே தெரிவித்து விடுவார்கள்.

master-nammavar-comparision
சமீபத்தில் கமல் லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் கூட நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ஒரு வெப்சீரிஸ் காப்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.
