Videos | வீடியோக்கள்
சிறப்பான தரமான செய்கை- தாறுமாறான மாஸ்டர் டீஸர் இதோ
தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் கோடை விடுமுறை 2020 க்கே வெளியாக இருந்த நிலையில் கொரானாவின் காரணமாக தள்ளிச் சென்று கொண்டே இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பாடல்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என அனைத்துமே இந்திய அளவில் ஹிட். படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

master
OTT தளத்தில் வெளியிடுவார்களோ என பலரும் எதிர் பார்த்த நிலையில், தயாரிப்பு தரப்பு மறுத்து வந்தனர். வெள்ளி திரையில் தான் மாஸ்டர் என முடிவாக இருந்தனர். இந்நிலையில் இன்று சன் டிவி யூ ட்யூப் சானலில் மாலை 6 மணிக்கு டீஸர் வெளி வந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து மிரட்டியுள்ளனர். திரைப்படத்தின் டீஸர் தீபாவளி முதல் திரையரங்குகளிலும் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோ ..
