fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒரே செட்டில்மென்ட் மொத்தமாக வாங்கிகறோம்.. மாஸ்டர், சூரரை போற்று பட விலையை சொல்லி அதிர வைத்த அமேசான்

suriya-vijay-amazon-release-master-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே செட்டில்மென்ட் மொத்தமாக வாங்கிகறோம்.. மாஸ்டர், சூரரை போற்று பட விலையை சொல்லி அதிர வைத்த அமேசான்

ஜோதிகாவின் பொன்மகள் படம் 4.5 கோடி உருவாக்கப்பட்டு 9 கோடி வரை ஆன்லைன் வர்த்தகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சிறு படமே பாதிக்கு பாதி வியாபாரம் ஆகி உள்ளதால். பெரிய படங்களை சொல்லவா வேணும்.

மேலும் இது படக்குழுவினருக்கு சிரமம் இல்லாத வேலை கூட ஆனால் சில கட்டுப்பாடுகளுடன் இன்னும் படங்கள் வெளிவர உள்ளது. இது ஒருபுறமிருக்க இனி வெளிவரும் அனைத்து படங்களும் ஆன்லைனில் வருவதற்கான முயற்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன. இதனால் பல தியேட்டர்கள் மூடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறு பட்ஜெட் படங்களையும் ஆன்லைனில் வங்கி வெளியிட்டால் கண்டிப்பா செலவு செய்த தொகை வந்துது விடும். இதனால் தமிழ் சினிமா கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. அதாவது ஒரு தனியார் நிறுவனம் நினைத்தால் தமிழ் சினிமாவின் குடுமியை எளிதாகப் பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டு விட்டார்கள்.

அடுத்து மாஸ்டர்க்கு 135 கோடியும் சூரரைப் போற்றுக்கு 60 கோடியும் விலை வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அப்படி இந்த படங்கள் மட்டும் விற்பனைக்கு வந்தால் கண்டிப்பாக தியேட்டர்களின் நிலைமை படு மோசம் ஆகி விடும். லாக் டவுன் முடிவதற்குள் இதற்கு ஏதேனும் வழி செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார்கள் தியேட்டர் முதலாளிகள்..

ஜோதிகா ஒரு தொடக்கம் தான். இனிமே தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் 3D படமாக எடுத்தால் தான் ரிலீஸ் ஆகும். அதிலும் சிக்கல் அனைத்து தியேட்டர்களையும் 3D ஸ்க்ரீன் போன்று மாற்ற வேண்டும் அதற்கும் செலவு செய்ய வேண்டும். இதில் பாதிக்க படுவது சிறு தியேட்டர்கள்தான்.

மேலும் தயாரிப்பாளர்களுக்கு வட்டி குட்டி போட்டு அதிகமான தலைவலியை மற்றும் மன அழுத்தத்தை கொடுப்பதால் சில படங்கள் தற்போது ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் படத்தை அவர்கள் ரிலீஸ் செய்ய வில்லை என்றால் தயாரிப்பாளர்கள் நிலைமையும் அதோ கதிதான்..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top