fbpx
Connect with us

Cinemapettai

எனக்கா ரெய்டு வைக்கறீங்க.. இதோ முடிச்சிட்டு வரேன்.. விஜய் சபதம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எனக்கா ரெய்டு வைக்கறீங்க.. இதோ முடிச்சிட்டு வரேன்.. விஜய் சபதம்

தளபதி விஜய் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த பிகில் படத்தின் மூலம் வந்த வருமானத்திற்கு வரி கட்டவில்லை என்று அதிகாரிகள் அழைத்து சென்று இரண்டு நாட்கள் விசாரித்தனர்.

இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு  நிறுத்தப்பட்ட செய்தி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் லோகேஷ் கனகராஜ் தளபதி இல்லாத காட்சிகளை படமாக்கி கொண்டிருந்தார்.

தற்போது வருமான வரி பிரச்னைகளை சுமுகமாக முடித்து விட்டு தளபதி மீண்டும் மாஸ்டர் படத்தில் களம் இறங்கியுள்ளார். இரண்டு நாட்கள் தளபதிக்கு கொடுத்த மண்டை  குடைச்சலால் தற்போது மாஸ்டர் பணம் இரண்டு மடங்காக சூடுபிடிக்கும் போகுதாம். இந்த படத்தின் ஆடியோ லான்ச் விரைவில் இருக்கும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

எப்போதுமே மேடையில் குட்டி கதை சொல்லி எச்சரிக்கும் நேரம் இது என்பதால் தளபதி காத்துக்கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். அரசியல் சூழ்ச்சியினால் மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ள தலைவனை பயமுறுத்தும் விதமாக இந்த வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது என்பது தற்போது நிதர்சனமான உண்மை ஆகி விட்டது.

இதனால் உரிய நேரத்தில் படம் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் வெளிவரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளது தளபதி ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top