Connect with us

Cinemapettai

மாஸ்டர் வருவாரா? மாட்டாரா? லோகேஷ் சொன்ன பதிலால் கவலையில் ரசிகர்கள்

vijay-lokesh-kanakaraj

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் வருவாரா? மாட்டாரா? லோகேஷ் சொன்ன பதிலால் கவலையில் ரசிகர்கள்

தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி65 படத்தைப் பற்றிய செய்திகள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அதற்கு முன்னர் அவர் நடித்த வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படத்தைப் பற்றிய பேச்சு மூச்சு இல்லை.

இதனால் ரசிகர்களும் பெரும் கவலையில் இருக்கின்றனர். கடைசியில் OTT தளத்திலாவது படத்தை வெளியிட்டு விடுங்கள் என கெஞ்சாத குறைதான்.

இதுகுறித்து சமூக வலைதளங்கள் வழியாக லோகேஷ் கனகராஜுக்கு தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுவரை மவுனம் காத்து வந்த லோகேஷ் கனகராஜ் தற்போது மாஸ்டர் படத்தை பற்றிய சோகமான தகவலை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, மிகவும் ஆவலாக எதிர்பார்த்து மாஸ்டர் படத்தின் டிரைலரை ரெடி செய்து வெளியிட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.

ஆனால் ஒருமுறை ரிலீஸ் தேதி உறுதி ஆகிவிட்டால் அடுத்த நாளே டிரைலர் வெளியாகிவிடும் என கூறியுள்ளார்.

இதையேதான் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கீங்க என தளபதி ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.

lokesh-kanagaraj-cinemapettai

lokesh-kanagaraj-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top