Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரிலீஸ் செய்தால் கோடிக்கணக்கில் நஷ்டம்.. மரண பயத்தில் மாஸ்டர் படம்
கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதியை வைத்து இயக்கிய மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளிவர காத்துக்கொண்டிருந்தது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் இசை வெளியீட்டு விழா என அனைத்திலும் பட்டையை கிளப்பினார்கள் மாஸ்டர் படக்குழுனர்.
சுருக்கமாக சொல்லப்போனால் சிம்பிளா சூப்பரா முடிச்சிட்டாங்க. தற்போது இந்த படம் வெளிவராது என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இசை வெளியீட்டு விழாவிற்கு முந்தின நாள் விநியோகஸ்தர்களின் சந்திப்பின்போது 9ஆம் தேதி படம் வெளிநாடுகளில் வெளியிட முடியாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆனால் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ, லலித் குமார் 9ஆம் தேதி வெளியிட வில்லை என்றால் தனக்கு பெரும் பண பிரச்சனை ஆகிவிடும் என்று கூறியுள்ளார். மாஸ்டர் படத்தின் வசூலை நம்பி வெளியில் கடன் வாங்கி அனைத்து செட்டில்மெண்ட் முடித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் தற்போது இந்தியாவில் கொரோனவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாதம் 31ஆம் தேதி வரை தியேட்டர்கள்,மால்கள் மூடப்பட்டு உள்ளது.
மீண்டும் இயல்புநிலை திரும்பினாள் தான் தியேட்டர்கள், மால்கள், பள்ளிக்கூடங்கள் திறக்க உள்ளன. ஆகையால் கண்டிப்பாக மாஸ்டர் படம் சொன்ன தேதிக்கு வெளிவராது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனைக் கேட்டு தளபதி ரசிகர்கள் பெரும் துக்கத்தில் உள்ளனர். ஆனாலும் பாதுகாப்பு கருதி ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்பது சூழ்நிலை.
அதுமட்டுமில்லாமல் 9ம் தேதி படம் வெளிவந்தால் கூட தமிழக அரசின் ஆணையின்படி ஏப்ரல் முதல் வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் 11ம் தேதி மீண்டும் தியேட்டர்கள் மூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம். தற்போது சூழ்நிலை மோசமாக இருப்பதால் வெளியிடுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாஸ்டர் வெளிவந்தால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாம். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் மாஸ்டர் படம் வெளிவருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புரியுது நீங்க சொல்ல வர்றது அவன் அவன் உசுர கையில புடிச்சிகிட்டு ஓடிட்டு இருக்கும் இந்த நேரத்துல மாஸ்டர் வந்தா என்ன வராடா என்ன.! எதிர்பார்ப்பு இருக்கும் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்.
