Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யின் மாஸ்டர் பட ரிலீஸ் தேதி உறுதி.. அப்புறம் என்னப்பா! ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா!
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.
ஆனால் எதிர்பார்த்தபடி படத்தை 2020ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட முடியாமல் போனது.
இந்நிலையில் மொத்த படத்தையும் முடித்து வைத்து விட்டு படக்குழுவினர் தியேட்டர் எப்போது திறப்பார்கள் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது தியேட்டர்கள் திறந்தாலும் 100% மக்கள் வருவதற்கான எந்த சூழ்நிலையும் அமையாத பட்சத்தில் தீபாவளிக்கு கூட படத்தை வெளியிட முடியாமல் தடுமாறினர்.
இதற்கிடையில் அவ்வப்போது மாஸ்டர் படம் விரைவில் OTT தளங்களில் வெளியாவதாக செய்திகளும் வதந்திகளும் அதிகமாக பரவி வந்த நிலையில் தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக தியேட்டரில்தான் வெளியிடப்படும் என உறுதி அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் படம் 2021 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியிட அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக தெரிகிறது.
சேர்த்து வைத்திருந்த மொத்த கொண்டாட்டத்தையும் கொண்டாடித் தீர்க்க தளபதி ரசிகர்கள் இப்போதே ரெடியாகி விட்டனர்.
அவர்கள் இருக்கும் வெறியை பார்க்கும்போது கண்டிப்பாக சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 31 கோடியை முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சினிமா வாசிகள்.

master-cinemapettai
