Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தர்பார் பாணியில் புதிய முயற்சி
கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் உறுதியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கதை அல்லது கதையை யூகிக்கும் எந்த விஷயங்களையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை. ஏன் விஜய்யின் கதாபாத்திரம் கூட என்னவென்று தெரியாத அளவுக்கு படக்குழு ரகசியம் காக்கிறது.
இந்நிலையில் படத்தின் கதை குறித்து எந்த தகவலும் இல்லாமலேயே படம் படு ஸ்பீடாக வியாபாரம் ஆகிவருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ரிலிஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி வெளியாகிறது என்று அறிவித்துள்ளனர் தமிழ் வருடபிறப்புக்கு ஐந்து நாட்கள் முன்னே ஏன் ரிலிஸ் செய்கிறார்கள். பத்தாம் தேதி புனித வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அதை தொடர்ந்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறை இதை வைத்து தான் இந்த படம் ஐந்து நாட்கள் முன்னே வெளியிட முடிவு செய்திருக்கிறது.
கிட்டதட்ட தர்பார் கதை தான். தர்பார் எப்படி பொங்கலுக்கு ஐந்து நாளுக்கு முன்பு வெளியானதோ அது போல் தான். இதன் மூலம் படத்தின் கதை எப்படி இருந்தாலும் வசூல் பட்டையை கிளப்பும் என்பதே இதற்கு காரணம்.
