துயரத்தில் மாஸ்டர் தயாரிப்பாளர்.. படுத்தி எடுக்கும் இயக்குனர்

கடந்த 6 மாதங்களுக்கு மேல் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் மாஸ்டர் படத்தால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு படத்தை ரிலீஸ் செய்து தற்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் இயக்குனர் ஒருவரால் பஞ்சாயத்து ஏற்பட்டுள்ளதாம்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே உருவான திரைப்படம் தான் மாஸ்டர். ஆனால் எதிர்பாராத சூழ்நிலையால் கடந்த பொங்கலுக்கு வெளியானது. இருந்தாலும் வசூலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.

மாஸ்டர் படம் மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ உரிமையாளர் லலித் குமார். மாஸ்டர் படத்திற்கு அடுத்ததாக அனைவரும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தை தான்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் கடைசி கட்ட காட்சிகள் ரஷ்யாவில் நடக்க இருந்து பின்னர் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொல்கத்தாவில் முக்கியமான காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆனால் சொன்ன தேதியில் கோப்ரா படத்தை முடிக்காததால் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

cobra-cinemapettai
cobra-cinemapettai

கொல்கத்தா படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என இயக்குனரை நம்பி ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்த தயாரிப்பாளர் தற்போது சேற்றில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கிறாராம். மேற்கொண்டு இன்னும் 30 நாட்கள் வேண்டுமென கேட்கிறாராம் அஜய் ஞானமுத்து.

ஆனால் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், நடிகை ஸ்ரீநிதி செட்டி ஆகியோரும் அடுத்தடுத்த படங்களில் நடிக்கச் சென்று விட்டார்களாம்.

இதனால் மீண்டும் கால்ஷீட் வாங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் செம டென்ஷனில் உள்ளாராம் லலித் குமார். இதனால் ஏப்ரல் மாதம் கோப்ரா படம் வெளியாகுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்