Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ்க்கு போட்டியாக களம் இறங்கும் டாப் சேனல்.. மாஸ்டர் பிளானால் குதுகலத்தில் ரசிகர்கள்!
கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கத்தால் சீரியல்கள் எதுவும் ஒளிபரப்பபடாத காரணத்தால் பல சேனல்கள் தங்களது டிஆர்பியை இழந்தன. அந்த வகையில் டாப் ட்ரெண்டிங்கில் இருந்த விஜய் தொலைக்காட்சி கடும் வீழ்ச்சியை கண்டது.
இந்த நிலையில் தற்போது இழந்த தனது டிஆர்பியை ஏற்றும் விதமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொடங்கி கோலாகலமாக ஒளிபரப்பி கொண்டிருக்கிறது விஜய் டிவி.
மேலும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கும், ட்ரோல் செய்வதற்கும் தனி ஃபேன்ஸ் பட்டாளமே உண்டு.
தற்போது விஜய் டிவிக்கு போட்டியாக பிரபல தொலைக்காட்சி சேனல் புதியதாக பிக்பாஸ் போலவே ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது விஜய் டிவியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது விஜய் டிவியின் போட்டி சேனலாக இருப்பதுதான் ஜீ தமிழ். இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியை தொடங்கி அதில் அந்தத் தொலைக்காட்சி பிரபலங்களை மூன்று நாட்கள் ஒரே வீட்டில் தங்க வைத்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க விஜய் டிவியை போலவே தினசரிப் ப்ரோமோக்களை வெளியிட்டு மக்களை அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கும் தூண்டி வருகின்றனர்.
என்னதான் இருந்தாலும் பிக்பாஸ் போல வருமா என்று பிக் பாஸ்- இன் தீவிர ரசிகர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியை கேலி செய்து வருகின்றனர்.

bigboss-promo
