Sports | விளையாட்டு
தோனியின் தலைமையில் ஆடப் போகும் விராட் கோலி, ரோகித் சர்மா.. கங்குலியின் மாஸ்டர் பிளான்
ஐ.பி.எல் போட்டிக்கு முன்னதாக தோனியின் தலைமையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாட போகிறார்களாம். இதனைக் கேட்டு ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக ஹாட்ஸ்டார் என்ற போட்டியை நடத்த பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் படெல் இருவரும் இணைந்து முடிவு செய்துள்ளனர்.
இதில் தோனி ஒரு அணிக்கு தலைமை ஏற்க வாய்ப்புள்ளதாம், இந்த செய்தியை கேள்விப்பட்ட உடன் ரசிகர்கள் குதுகலத்தில் உள்ளனர்.
அடுத்த மாத கடைசியில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக இந்த கண்காட்சி போட்டி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக ஒரு பிரம்மாண்ட விழாவையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
தோனியை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
