Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் கையில் உள்ள பூனை விலை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா என ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது மாஸ்டர். படம் சுமாரான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் தாறுமாறாக இருந்து வருகிறது.
திரைக்கதைக்கு பெயர்போன லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் கொஞ்சம் சொதப்பி உள்ளது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் விஜய்க்கு நிகராக இருந்தது. படம் எப்படி இருந்தாலும் வசூல் அமோகமாக இருக்கிறதாம்.
எப்போதுமே விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அந்த படத்தில் பயன்படுத்திய சின்ன சின்ன பொருட்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அவர்களை அந்த பொருட்களை வாங்க தூண்டும். அந்த வகையில் மாஸ்டர் படத்தில் அனைவரையும் கவர்ந்தது விஜய் வளர்க்கும் அந்த பூனை.
அது ஒன்றும் வீட்டு பூனையோ நாட்டு பூனையோ கிடையாதாம். பெர்சியன் (persian) என்ற வகையை சேர்ந்த அந்தப் பூனையின் விலை இந்திய மதிப்பில் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்கப்படுகிறதாம். மேலும் அந்த பூனைக்குட்டிகள் 18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

master persian cat
ஒரு சராசரி இந்தியக் குடிமகனின் மாத சம்பளத்தை விட அதிகமாக விற்கும் அந்த பூனை குட்டிகளை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்களாம். மாஸ்டர் படத்தை பார்த்த குழந்தைகள் அந்த பூனை வேண்டும் என அடம் பிடிப்பது எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.
இதனால் வரும் காலங்களில் இந்த பூனையின் விலை இன்னும் உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் வியாபாரிகள். அந்த பூனையைப் போலவே மாஸ்டர் படத்தில் விஜய் பயன்படுத்திய காப்பு மற்றும் கார் ஆகியவற்றிற்கும் செம டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாம்.
