Photos | புகைப்படங்கள்
ரசிகர்கள் கேட்க விஜய்யுடன் எடுத்துகொண்ட கூல் போட்டோவை பதிவிட்ட மாளவிகா மோகனன்
போக்கிரி பொங்கலை போல பலத்த எதிர்பார்ப்புடன் மாஸ்டர் பொங்கல் ஆரம்பித்துள்ளது. இளம் இயக்குனர், அவர் மீது நம்பிக்கை வைத்த விஜய், அவர் கேட்டது போன்ற டீம்மையே அமைத்து படத்தை நடித்து கொடுத்துள்ளார்.
தனி மனிதனாக தமிழ் சினிமா மீண்டும் உயிர்த்தெழ விஜய் சுமார் 11 மாதங்களாக முடிந்த நிலையில் உள்ள படத்தை ரிலீஸ் செய்யாமல் காத்திருந்தது சினிமா மேல் அவர் வைத்துள்ள மதிப்பை நமக்கு உணர்த்துகிறது.
இப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகன். சினிமாவில் ஆரம்ப ஸ்டேஜிலேயே சூப்பர் ஸ்டார், தளபதி என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் ட்விட்டரில் கேள்வி பதில் செக்ஷனில் கலந்துகொண்டார். ரசிகர்களின் கேள்விக்கு அசத்தலாக பதில் தந்து வந்தார்.
தளபதி தன்னை “மாலு” என அழைப்பார் என்றார், மேலும் பிடித்த பாடல் என்ற கேள்விக்கு, “குட்டி ஸ்டோரி மற்றும் அந்த கண்ணை பார்த்தா.” என சொல்லியுள்ளார்.
இதுமட்டுமன்றி பல ரசிகர்களும் கேட்டுக் கொண்டதன் பெயரில் யதார்த்தமான போட்டோவை விஜய் ரசிகர்களுக்கு பகிர்கிறேன் என ட்வீட் செய்தார்.

master pair
ஜெ டி மற்றும் சாறு சார்பில் பொங்கல் வாழ்த்துக்களையும் பகிர்ந்தார்.
