fbpx
Connect with us

Cinemapettai

மாஸ்டர் OTT ரிலீஸ் தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதால் கடுப்பில் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் OTT ரிலீஸ் தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதால் கடுப்பில் ரசிகர்கள்

சூர்யாவின் சூரரைப்போற்று படம் OTTயில் வெளியாவதைத் தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படமும் வெளியாக உள்ளதாக பல மாதங்களாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

ஆனால் மாஸ்டர் படம் கண்டிப்பாக OTT தளங்களில் வெளியாகாது என தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் மீண்டும் மீண்டும் இந்த மாதிரி செய்திகள் வெளியாகி ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ உடன் சேர்ந்து 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் தற்போது வரை வெளியாக முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் தீபாவளி தினத்தன்று மாஸ்டர் படம் வெளியாக இருப்பதாக சமீபத்தில் ஒரு போஸ்டர் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில் அது பொய்யான தகவல் என்பது தெரியவந்தது.

தற்போது பிரபல முன்னணி பத்திரிக்கை நிறுவனமான புதிய தலைமுறை சேனலில் மாஸ்டர் படம் அமேசான் தளத்தில் வெளியாவது உறுதி என்பதை போல ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

master-PT

master-PT

இதனால் மீண்டும் மாஸ்டர் படத்தைப் பற்றிய தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் டென்ஷனில் உள்ளனர்.

Continue Reading
To Top