240 நாடுகளில் அமேசானில் வெளியாகும் மாஸ்டர்.. தேதியுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படம் உலகம் முழுவதும் வெளியானது. இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் படங்களிலேயே மிகப்பெரிய ஷேர் கொடுத்த படமாக மாறியது மாஸ்டர்.

படம் வெளியாகி வெறும் 15 நாட்களில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது மாஸ்டர் திரைப்படம். இதுவரை தமிழ் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகி அடுத்த 30 நாட்கள் கழித்துதான் OTT தளங்களில் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த முறை தியேட்டர்காரர்கள் அனுமதியுடன், பல வெளிநாடுகளில் மாஸ்டர் படம் தியேட்டர்களில் வெளியாக வில்லை என்ற காரணத்தினால் விரைவில் அமேசான் தளத்தில் வெளியிட முடிவு செய்த படக்குழு வருகின்ற ஜனவரி 29ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாம்.

master-on-amazon-prime
master-on-amazon-prime

மேலும் தியேட்டருக்காக வெட்டப்பட்ட சில காட்சிகளும், கெட்ட வார்த்தைகளும் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் தியேட்டரில் 3 மணி நேரம் படம் என்றால் அமேசான் தளத்தில் 3 மணி 10 நிமிடம் ஆகும்.

இதனால் மாஸ்டர் படத்தில் விடுபட்ட காட்சிகளை பார்ப்பதற்காகவே தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மாஸ்டர் படத்தை டிரண்ட் செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் OTT தளத்திலும் தியேட்டரில் ஓடும் ஒரே திரைப்படம் மாஸ்டர் தானாம்.

இதனை அமேசான் நிறுவனம் ஒரு புதிய ட்ரெய்லர் உடன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்திற்காக உருவாக்கப்பட்டிருந்த ட்ரெய்லரை தற்போது அமேசான் நிறுவனம் பயன்படுத்தி உள்ளதாம். முன்னதாக மாஸ்டர் ட்ரெய்லருக்கு பதிலாக டீசர் தான் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்