Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் படத்தில் கசிந்த விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல்.. பக்கா மாஸ்
2020 ஆம் ஆண்டு வெளியாகும் திரைப்படங்களில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக வெளிவர இருப்பது தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படம்தான்.
இவர்கள் மட்டுமின்றி சாந்தனு, அர்ஜுன் தாஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்குகிறார். சேவியர் பிரிட்டோவுடன் இணைந்து 7 ஸ்டுடியோஸ் லலித் குமார் மாஸ்டர் படத்தை தயாரித்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கி உள்ளன.
இந்நிலையில் தளபதி விஜய் கல்லூரிப் பேராசிரியராக நடித்து வருகிறார் என தகவல்கள் கசிந்தன. ஆனால் விஜய் சேதுபதி எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால் தற்போது ஜேம்ஸ் துரைராஜ் என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தை கையாண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
ஆனால் இதனைப் பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. மேலும் விஜய்யின் கதாபாத்திரத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரமும் இருக்குமென படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அப்போ சம்மர் டபுள் ட்ரீட்..
