Tamil Cinema News | சினிமா செய்திகள்
13 வருடங்களுக்கு முன் தோற்றுப்போன விஜய்.. கலாய்த்தவர்களை மிரட்டப் போகும் மாஸ்டர்
2020 ஆம் ஆண்டு மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு திரைப்படம் தான் மாஸ்டர். தளபதி விஜய் மற்றும் மாளவிகா மோகனன் நடிக்கும் இந்த படத்தை மாநகரம், கைதி புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை விஜய்யின் உறவினர் தயாரிக்கிறார்.
மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. மிருகத்தனமான ரவுடி வேடத்தில் நடித்து இருப்பதாகவும், ஃப்ளாஷ்பேக் காட்சிகள் முழுவதும் ரணகளமாக இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தளபதி விஜய், விஜய் சேதுபதி தோன்றும் காட்சிகள் மரணமாஸ் ஆக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முன்பே விஜய், அழகிய தமிழ் மகன் என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார்.
ஆனால் அந்த காலகட்டங்களில் விஜய்யை வில்லன் வேடத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பாக்ஸ் ஆபீஸில் செம்ம அடி வாங்கியது. தற்பொழுது விஜய் தமிழ் சினிமாவில் உள்ள உயரத்திற்கு எந்தவிதமான கேரக்டர் வேண்டுமானாலும் செய்யலாம்.
ஏன், அவரது ரசிகர்கள் கூட இதுவரை இல்லாத அளவுக்கு மாஸ்டர் படத்தில் விஜய்யின் வில்லன் கதாபாத்திரத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து இணையத்தை மிரட்டியது அனைவரும் அறிந்ததே.
மாஸ்டர் படம் கண்டிப்பாக விஜய்யின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக மாறக் கூடிய அனைத்து அம்சங்களும் பெற்றுள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்மர் தளபதி விஜய்க்கு செம்ம கலெக்ஷன் தான்.
