Connect with us
Cinemapettai

Cinemapettai

மாஸ்டர் படத்தை வாங்கிய நிறுவனம் பரபரப்பு டுவிட்.. அடப்பாவிகளா! தளபதி செம்ம கெத்து

master

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தை வாங்கிய நிறுவனம் பரபரப்பு டுவிட்.. அடப்பாவிகளா! தளபதி செம்ம கெத்து

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ’மாஸ்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜயுடன் விஜய் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் வருகிறார்.

வில்லன் வேடம் என்று சொல்கிறார்கள் . ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு 60% மட்டுமே இதுவரை நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் ஒட்டு மொத்த வியாபாரமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

‘மாஸ்டர்’ படத்தின் தமிழக உரிமை மற்றும் கேரள, கர்நாடக, தெலுங்கு மாநிலங்களின் உரிமைகளும், வெளிநாட்டு உரிமைகளும், சாட்டிலைட் உரிமையையும், டிஜிட்டல் உரிமையும் விற்பனையாகி விட்டது.

ஒரு திரைப்படம் உருவாகி கொண்டிருக்கும்போதே உலக அளவில் விற்பனையாவது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். விஜய் படங்கள் பொதுவாகவே மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆகும் என்பதால் இது விஜய்யின் மிகப்பெரிய பலம் என்று ரசிகர்கள் செய்கிறார்கள்.

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை ஒரு மிகப்பெரிய தொகையை வாங்கிய மாலிக் ஸ்ட்ரீம்ஸ் என்ற நிறுவனம் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற நாங்கள் இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் விற்பனை செய்து விட்டோம்.

‘மாஸ்டர்’ படத்தின் டீசர் இன்னும் வெளியாகவில்லை, ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை, இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கூட வெளியாக வில்லை. ஆனால் இந்த படத்தின் ஒட்டு மொத்த வியாபாரமும் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top