Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த மூன்று காரணத்துக்காக மாஸ்டர் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது ஆடியோ லான்ச் லைவ் செய்யப்படவுள்ளது. மார்ச் 15ஆம் தேதி இந்த நிகழ்ச்சியை சன்டிவி வெளியிடுகிறது.
இதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ள சேட்டன், மாஸ்டர் படம் பார்ப்பதற்கு மூன்று முக்கிய காரணங்களை பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தில் தளபதி விஜயின் வித்தியாசமான தோற்றத்தை பார்க்கலாம். இந்த கதாபாத்திரம் பொறுத்தவரை நாம் இந்த மாஸ்டரிடம் ஸ்டூடன்டாக படிக்கவில்லை என்ற ஏக்கம் வருமாம்.
தளபதியை ஸ்கிரீனில் பார்ப்பதே ஒரு ஏக்கம் தான். டெல்லி படப்பிடிப்பின்போது படக்குழுவினர் அதிகமான மாசு ஏற்பட்டதால் சோர்ந்து போன சூழ்நிலையில் கூட தளபதி விஜய் உற்சாகப்படுத்தி படப்பிடிப்பை நடத்தினார்களாம்.
இரண்டாவதாக தளபதி விஜய் மட்டும் விஜய்சேதுபதியின் காம்போ மிக அற்புதமாக வந்திருக்கிறது. மூன்றாவதாக கைதி படத்தை இயக்கி அதிக லாபம் ஈட்டிய லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தில் தன் பாணியில் அசால்ட் செய்துள்ளதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

chettan
அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் வெளிவந்து உலக அளவில் பல சாதனைகளை பெற்றுள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய் நண்பர்கள் சேர்ந்துள்ளது இன்னும் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தில் தலைசிறந்த இயக்குனர் தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் முக்கியமாக இடம் பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. மாஸ்டர் படம் மாபெரும் வெற்றி பெறும், அப்படி வெற்றி பெற்றால் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தளபதியுடன் இணைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
