Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடித்துக்கொள்ளும் மாஸ்டர் தயாரிப்பாளர்கள்.. விழி பிதுங்கி நிற்கும் விஜய்
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை முதலில் சேவியர் பிரிட்டோ தன்னுடைய எக்ஸ்பி பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து இருந்தார்.
ஆனால் மாஸ்டர் படம் ஆரம்பமாகும் போதே அந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமாருக்கு கைமாற்றி விட்டார்.
படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாததால் தற்போது லலித் குமாருக்கு வியாபார ரீதியாக சில சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் சேவியர் பிரிட்டோ தொடர்ந்து லலித்குமாரிடம் செலவு செய்த பணத்தை கொடுக்குமாறு டார்ச்சல் செய்துவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லலித்குமார் தளபதி விஜய்யிடம் விஷயத்தைக் கொண்டு சென்றுள்ளார்.
சேவியர் பிரிட்டோ தன்னுடைய சொந்த மாமா என்பதால் விஜய் தற்போது அவர் விஷயத்தில் இன்னும் முடிவு எடுப்பது என கவலையில் இருக்கிறாராம்.
இருந்தாலும் லலித்குமாரிடம், விஜய் நான் பார்த்துக்கொள்கிறேன் என நம்பிக்கை வார்த்தை கூறியதாக தெரிகிறது.

vijay-vijay-sethupathy-master
