Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் பிறந்த நாளை குறி வைக்கும் விஜய்.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லையே
தளபதி விஜய் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி கொண்டே செல்வதால் படக்குழு மிகவும் வருத்தத்தில் உள்ளது.
கைதி படத்திற்குப் பிறகு தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ்க்கு வாய்ப்பளித்தார். அதனை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு நான்கே மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டனர் மாஸ்டர் படக்குழுவினர்.
மேலும் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. அதில் தளபதி விஜய் அரசியல் பற்றி ஏதேனும் பேசுவார் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் தனது ரசிகர்களுக்கு நல்லதை கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 9 என ஏற்கனவே படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் சமீபத்தில் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரானா பாதிப்பால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது.
மாஸ்டர் படத்தின் வெளியீட்டு தேதி மே 1 என முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னொரு விசேஷம் என்னவென்றால் அந்த தினத்தில் தான் தல அஜித் அவர்களுக்கு பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தளபதி விஜய் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நண்பர் அஜித் என அவரைப் பற்றி கூறியது தல மற்றும் தளபதி ரசிகர்கள் இடையே பெரும் ஒற்றுமையை ஏற்படுத்தி உள்ளது. தல அஜித் பிறந்த நாளன்று மாஸ்டர் படத்தின் வெளியீடு இருப்பதால் மொத்தமும் கொண்டாடித் தீர்க்க முடிவெடுத்து விட்டார்கள் தல தளபதி ரசிகர்கள்.
தமிழ்நாடே அதிரப்போகிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
