Connect with us
Cinemapettai

Cinemapettai

master-vijay-cinempaettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியால் மாஸ்டர் படத்திற்கு வந்த கிடுக்குபுடி பிரச்சனை.. ஒன்னும் சொல்ல முடியாமல் தவிக்கும் விஜய்

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் சரிவுகளை கண்டாலும் தற்போது அதிலிருந்து மீண்டு பிரம்மாண்டமான மலையைப் போல் திரையுலகில் உயர்ந்து நின்று கொண்டிருக்கிறார் விஜய்.

புகழ்ச்சி இருந்தால் இகழ்ச்சியும் இருக்கும் என்பதற்கு ஏற்ப தற்போது வரும் விஜய் படங்களுக்கு எல்லாம் பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருப்பது நாம் அறிந்ததே.

அந்தவகையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்திற்கு அந்தப் படத்தில் நடித்த விஜய் சேதுபதியால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தற்போது தளபதி நடிக்கும் படங்கள் அரசியல் கட்சிகளை தாக்கிப் பேசும் வசனத்தை கொண்டிருப்பதால் மெர்சல், சர்க்கார் ஆகிய படங்கள் அரசியல் கட்சிகள் மூலம் பல எதிர்ப்பை சந்தித்தன. இவ்வாறு இருக்க விஜய் வெறியர்கள் அதிக அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் மாஸ்டர்.

மேலும் இதில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி தற்போது முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்த படத்தில் முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கையையும், இலங்கையில் நடந்த தமிழர்களின் படுகொலையும் பற்றி கூற இருக்கிறார்களாம்.

இந்தக் காரணத்தினால் விஜய் சேதுபதி சேதுபதியை பலரும் எதிர்த்து வந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் #shameonuvijaysethupathy ஸ்டைலும் ட்ரெண்டாகி வந்தது. இது ஒரு புறமிருக்க விஜய் சேதுபதி அடுத்தடுத்த நடிக்கும் படங்கள் அனைத்தும் எதிர்ப்புகள் வர வாய்ப்பிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படமும் எதிர்ப்புகளை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

vijay-vijay-sethupathy-master

vijay-vijay-sethupathy-master

இந்தச் செய்தி மாஸ்டர் படத்தை எதிர்நோக்கி காத்திருந்த தளபதி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது.

Continue Reading
To Top