Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் கைதி படத்தில் இறுதிக் கட்டம் வரை பரபரப்பை ஏற்படுத்தி இருப்பார், அதேபோல் ரசிகர்களுக்கும் மாஸ்டர் படத்திலும் விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
ஜீ-தமிழ் நடத்திய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் மற்றும் அணிருத் மாஸ்டர் படத்தைப்பற்றி தெரிவித்துள்ளனர். அதில் லோகேஷ் கனகராஜ் கூறுகையில் மாஸ்டர் படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது அதுவும் தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதிக்காண காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இசையமைப்பாளரான அனிருத் மாஸ்டர் படத்தைப் பற்றி கூறுகையில் படம் செம்மையாக வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தளபதி விஜய்க்கு இந்தப் படம் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Thalapathy64 Is Progressing At Brisk Pace. Lokesh Seems To Have Impressed Vijay So Much That He Might Direct One Of His Next Upcoming Films Too. Anirudh Seems To Have Outscored His Previous Best Kaththi In Terms Of Background Score !! #Master
— Dr.R.Suresh Kumar (@TheStagerTv_) January 12, 2020
அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் திரைப்பட டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் போட்டி போட்டுக்கொண்டு மாஸ்டர் படத்தை வாங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுவே மாஸ்டர் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்றே கூறலாம் அதேபோல் ரசிகர்கள் எதிர் பார்ப்போம் இந்த படத்தில் 100% இருக்கும் என்று தெரிகிறது.
Fourth Schedule போயிட்டு இருக்கு! போன வாரத்தில் இருந்து விஜய் அண்ணனும், விஜய் சேதுபதி அண்ணனும் சேர்ந்து நடிக்கிறாங்க! – லோகேஷ் கனகராஜ் about Master! #ZeeCineAwardsTamil2020 #ThiraiyinThiruvizha #ZeeTamil
— Zee Tamil (@ZeeTamil) January 12, 2020
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 2020-ல் முக்கிய இயக்குனர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
மாஸ்டர் படம் செமயா வந்துட்டு இருக்கு! – அனிருத் #ZeeCineAwardsTamil2020 #ThiraiyinThiruvizha #masterupdate #ZeeTamil
— Zee Tamil (@ZeeTamil) January 12, 2020
