இது என்னடா மாஸ்டருக்கு வந்த சோதனை.! மீண்டும் வேட்டையை ஆரம்பித்த வருமானவரித்துறை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளிவர காத்துக் கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்த படத்தின் இரண்டாவது லிரிகல் வீடியோ சற்று நேரத்தில் வெளிவர உள்ளது, அதுமட்டுமில்லாமல் வரும் மார்ச் 15-ம் தேதி இந்த படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் மாஸ்டர் படத்தின் இணை இயக்குனரான லலித் குமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது தளபதி விஜய்க்கு பெரும் தலைவலியாக வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  மாஸ்டர் படத்தில் அதிகமான லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் இந்த சோதனை நடைபெற்று இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமில்லாமல் அரசியல் ரீதியாக ஒரு சில பிரச்சனைகளை சந்தித்து வரும் தளபதி  விஜய்க்கு இது ஒன்றும் புதிதல்ல. லலித் குமார் விக்ரம் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் கோப்ர படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment