Connect with us

Cinemapettai

திரையுலகை தாக்கிய ‘மாஸ்டர்’ அட்டாக்.. பிரபலங்கள் வெறித்தனமான ட்விட்

thalapathy-64master

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திரையுலகை தாக்கிய ‘மாஸ்டர்’ அட்டாக்.. பிரபலங்கள் வெறித்தனமான ட்விட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘தளபதி 64’ படத்திற்கு ‘மாஸ்டர்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த தலைப்பு மற்றும் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் குறித்து திரைப்பிரபலங்கள் கூறியதை இப்போது பார்ப்போம்.

தளபதி விஜய், விஜய்சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அனிருத், சாந்தனு என மாஸ்டர் டீம் அனைவருக்கும் மாஸ்டர் படம் வெற்றி பெற வாழ்த்துவதாக நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து மூன்று படங்களை எடுத்த இயக்குநர் அட்லி, மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து வெறித்தனம் என டுவிட் போட்டிருக்கிறார்.

மாஸ்டர் படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், தனது ட்விட்டர் பக்கத்தில் 2020 கோடை விடுமுறையை தெறிக்கவிடலாம் என கூறியிருக்கிறார்.

ஆப்பிரிக்காவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன், படத்தின் டைட்டில் லுக் வெளியானதை நடனமாடி கொண்டாடும் விதமாக எமோஜி டுவிட் போட்டிருக்கிறார்.

தளபதி விஜய்யின் தெறி படத்தில் நடித்துள்ள நடிகை சுனைனா, மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து ஃபயராக இருக்கிறது என கூறியுள்ளார்.

மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் பார்த்த லாரன்ஸ், “நண்பா மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அருமை. மாஸ்டர் படம் வெற்றிபெற ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்” என டுவிட்டரில் கூறியுள்ளார்.

மஞ்சிமா மோகன் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து ஃபயராக இருக்கிறது என நடிகை மஞ்சிமா மோகன் ட்வீட் போட்டுள்ளார்.

வாவ்.. மாஸ்டர் செம்ம சார்.. நெருப்பா இருக்குதுன்னு தர்பார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ட்வீட் போட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top