தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தினை ரசிகர்கள் மட்டுமின்றி பல திரை பிரபலங்களும் திரையில் காண காத்திருக்கின்றனர். ஏனென்றால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் இப்படத்தில் நடித்து உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குவதால் ரசிகர்கள் கண்டிப்பாக இப்படம் எப்படி இருந்தாலும் கோடி கோடியாக அள்ளும் என்பதால். அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு எந்த அளவிற்கு மாஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதோ அதே அளவிற்கு விஜய் சேதுபதிக்கும் இப்படத்தில் மாஸ் ஆனா காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்படத்தின் டீசர் பார்க்கும்போது அனைவருக்கும் தெரியும்.
கொரானா காரணமாக தியேட்டரில் எந்த ஒரு படமும் அதிக வசூலை பெறவில்லை. அதனால் மனமுடைந்த தியேட்டர் உரிமையாளர்கள் தற்போது மாஸ்டர் படத்தை எப்படியாவது திரையில் வெளியிட்டு மொத்த வசூலையும் அல்ல வேண்டும் என்பதை குறிக்கோளாக உள்ளனர். அதனை பயன்படுத்தி மாஸ்டர் படக்குழு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

premkumar
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரேம்குமார். இப்படத்தின் டப்பிங் வேலையை முடித்து விட்டதாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது அதனை கொண்டாடி வருகின்றனர். எது எப்படியோ இந்த பொங்கலுக்கு நம்ம கலெக்சன் சூப்பர்மா.