Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நெட் பிலிக்ஸின் படத்தில் தனுஷை ஏன் ஒப்பந்தம் செய்தனர்! அதன் பின் உள்ள அரசியில் இதுதான்

தனுஷ் – வெங்கடேஷ் பிரபு என்பது இயற்பெயர். தனது முதல் படமான “துள்ளுவதோ இளமை” வாயிலாக தனுஷ் என அறிமுகமானார். கமலின் குருதிப்புனல் கொடுத்த இன்ஸபிரேஷன் தான் இந்த பெயரை அவர் தேர்ந்தெடுத்தார். ஆரம்ப நாட்களில் கமெர்ஷியல் படங்களில் அதிக கவனம் செலுத்தினார், அண்ணன் செல்வராகவன், இயக்குனர் வெற்றிமாறனின் படங்கள் நடிகர் தனுஷை நமக்கு அறிமுகப்படுத்தியது. கோலிவுட் மட்டுமன்றி பாலிவுட், ஹாலிவுட் என ஹீரோ ரோலில் நடித்துவிட்டார் மனிதர். இன்றைய தேதிக்கு தென்னிந்தியா என்ற லிமிட்டை கடந்து, இந்திய அளவில் ரீச் உள்ள மனிதர்.

தமிழ் சினிமாவில் பிஸி என்றாலும் ‘அட்ரிங்கி டீ’ என்ற ஹிந்தி படத்தில் நடித்துவிட்டார். அதுமட்டுமன்றி நெட் பிலிக்ஸ் தயாரிப்பில் அவென்ஜர்ஸ் புகழ் ரூஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

THE GRAY MAN ரியான் கோஸ்லிங் மற்றும் க்றிஸ் எவன்ஸ் முக்கிய ரோலில் நடிக்கும் படம். இந்த இருவருக்குள்ளும் நடக்கும் ஆடு – புலி ஆட்டமே கதை. ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் அசத்தல் ஸ்பை திரில்லர் வகையாறா இப்படம். மார்க் கிரீனி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்ட படம். ஒன்று மட்டுமல்ல அடுத்தடுத்து பார்ட்கள் எடுக்கும் திட்டம் நெட் பிலிக்ஸ் வசம் உள்ளது.

இந்த கொரானா தொற்று சமயத்தில் மட்டும் 10 மில்லியன் வாடிக்கையாளர்களை கடந்துள்ளதாம் நெட் பிலிக்ஸ். சுமார் 190 நாடுகளில், கிட்டத்தட்ட 195 மில்லியன் வாடிக்கையாளர்களை உள்ளனராம். இவர்கள் தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தில் தான் நம் தனுஷ் நடிக்கிறார்.

இவ்வளவு பெரிய ப்ரொஜெக்ட்டில் நடிக்க இந்திய ஒருவர் தேவை என்ற நிலை இருப்பினும் கூட, நீ நான் என போட்டி போட்டுகொண்டு பாலிவுட்டில் இருந்து நடிக்க பலரும் ரெடி தான். ரஸோ சகோதர்கள் படத்தை யாருமே மிஸ் செய்ய விரும்பமாட்டார்கள். எனினும் தனுஷை ஒப்பந்தம் செய்ததில் கார்ப்ரேட் மூளையும் தந்திரமும் உள்ளது.

the-gray-man-cinemapettai

the-gray-man-cinemapettai

தமிழக ரசிகர்களை கவருவதே முக்கிய நோக்கம். தமிக்கத்தில் உள்ளது போல விஸ்வாசமான ரசிகர் கூட்டம் உலகளவில் வேறு எந்த நடிகருக்கும் கிடையாது. தனுஷ் நடிக்கும் பட்சத்தில் நெட் பிலிக்ஸ் தமிழகத்தில் அதிக ரீச் ஆகும். ஏற்கனவே ஹிந்தி ரசிகர்களை கவர சில பல வெப் சீரிஸ்கள் முன்னணி நடிகர்களை வைத்து எடுத்து விட்டனர். அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. மேலும் பாவக்கதைகள் வாயிலாக ஒரிஜினல் கன்டென்ட் எடுத்து இங்கும் முயற்சி செய்து பார்த்துள்ளனர்.

அடுத்தபடியாக குறிப்பாக தென்னிந்தியாவில் அமேசான் ப்ரைம்மின் ஆதிக்கமே அதிகம். சூரரைப்போற்று கொடுத்த வெற்றியை அனைத்து OTT நிறுவனமும் ஆச்சரியமாக தான் பார்த்தனர். அமேசான் சூர்யா வைத்து செய்த யுக்தியை நெட் பிலிக்ஸ் தனுஷ் வைத்து செய்ய திட்டமிடுகின்றனர். எவ்வளவு பெரிய நிறுவனமாக இருப்பினும் தமிழக மக்கள் என்றவர்கள் நல்ல சினிமா, சீரிஸை ஆதரிக்கும் ஆடியன்ஸ் என்பது அவர்களுக்கும் தெரியும். மற்ற தெலுங்கு, மலையாள நடிகர்கள் போல இல்லாமல், தங்கள் மாநிலம் மட்டுமன்றி, இந்திய அளவில் தனுஷ் பிரபலம், எனவே கட்டாயம் இந்திய அளவில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இந்த முடிவுக்கு பின் இருக்கும் மற்றோரு முக்கிய காரணம் நெட் பிலிக்சில் வெளியான “EXTRACTION”  என்ற படம் தான். இதில் ஹாலிவுட் ஸ்டார்களுடன் (கிறிஸ் ஹெல்ம்ஸ்ஒர்த்) நம் பாலிவுட் நட்சத்திரங்களும் (ரன்தீப் ஹூடா, பங்கஜ் திரிபாதி) நடித்தனர். இந்தியா, நேபாளில் நடப்பது போன்ற கதைக்களம். இந்தியா பின்னணியில் கதை நடப்பதன் காரணத்தால் அதிகம் பார்க்க்கப்பட்ட படமாக இந்தியாவில் சாதனை படைத்தது. எனவே தான் தனுஷ் போன்ற நடிகரை படத்தில் சேர்த்து இந்தியாவில் விளம்பரப்படுத்த திட்டம் போட்டுள்ளனர் நெட் பிலிக்ஸ் குழு.

Continue Reading
To Top