Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி கேட்டதால் இருக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்த பிரபலம்.. மாஸ்டர் அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் மாஸ்டர் படத்தின் சூப்பர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அத்துடன் அந்த அப்பேட்டில் செய்தியோடு விஜய்க்கு முத்தமிடும் விஜய் சேதுபதியின் போட்டோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி மாளவிகா மோகன், நடிகர் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படம் குறித்து அவ்வப்போது தகவல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் படத்தின் 3 போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்டது படக்குழு, கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று அனிருத் இசையில் விஜய் சொந்தக் குரலில் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் வெளியானது. இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் செம்ம பிரபலம் ஆகிவிட்டது.
இந்நிலையில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பிறந்தநாள் படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாப்பட்டது. அப்போது நடிகர் விஜய் சேதுபதி கலை இயக்குநர் சதீஷ் குமாருக்கு வாழ்த்துச் சொல்லி கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விஜய் தனக்கும் ஒரு முத்தம் வேண்டும் என்று விஜய் சேதுபதியிடம் கேட்க, அவருக்கு அன்பு முத்தம் கொடுத்தார். தற்போது அந்த முத்தப் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாகவும் படக்குழு கூறியுள்ளது.

vijay-vijaysethupathi
மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் பணிகள் தொடங்கி நடைபெற்று விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் நல்ல ஒரு அப்பேட் வரலாம். ஐஎம் வெயிட்டிங் மோடில் தளபதி ரசிகர்கள். ஏனெனில் மாஸ்டர் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
