Connect with us

Cinemapettai

தளபதி-64 மிரளும் கோலிவுட்.. லேட்டஸ்ட் அப்டேட்.. அடுத்து இயக்கப்போவது இவர்தானாம்?

thalapathy-64-suntv

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி-64 மிரளும் கோலிவுட்.. லேட்டஸ்ட் அப்டேட்.. அடுத்து இயக்கப்போவது இவர்தானாம்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜயின் 64வது படம் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் விக்ரம் வேதா போல பிரபலமாக பேசப்பட வேண்டும் என்பதில் இயக்குனர் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் சண்டைக்  காட்சிகளில் நடிகைகளை களமிறங்கியுள்ளார். மாளவிகா மோகன் ரொமான்ஸ் மட்டுமில்லாமல் சண்டை பயிற்சிகள் கற்று வருகிறாராம். நடிகை ஆண்ட்ரியா சொல்லவே வேண்டாம் ஆக்ஷனில் கலக்குவார்.

இவர்கள் இருவருக்குமே சண்டை பயிற்சி கொடுக்கப்பட்டு சண்டைக்காட்சிகளில் நடிக்கிறார்களாம். இந்த சண்டைக்காட்சி மக்களிடையே பெரும் கைதட்டல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் வெளிவந்து கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தளபதியை வைத்து மீண்டும் படம் எடுத்து விட வேண்டும்  என்பதற்காக நேர்த்தியாக அவரின் திறமையை வைத்து லோகேஷ் வளைத்துப் போட உள்ளாராம்.

இதில் முக்கியமானது என்னவென்றால் தளபதி அடுத்த படத்தில் 100 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். சன் பிக்சர்ஸ் தளபதியின் 65வது படத்தை தயாரிக்க உள்ளது. அதற்கான முன் பணம் கொடுத்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

தளபதயின் அடுத்த படத்திற்காக பாண்டிராஜ் மற்றும் பிரபல இயக்குனர்கள் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top