அட மாஸ்டர் குட்டி ஸ்டோரி சிங்கிள்.. தனுஷின் இந்த வைரல் பாட்டு போலவே

தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் “ஒரு குட்டி கதை” சிங்கிள் நேற்று மாலை வெளியாகி சென்சேஷனல் மற்றும் வைரல் ஹிட் அடித்துள்ளது. அனிருத் இசையமைக்க தளபதி விஜய் அவர்களே பாட, இப்பாடல் முழுவதும் பாசிட்டிவ் பீல் பாட்டரியே உள்ளது. {மாஸ்டர் குரலில் ‘ஒரு குட்டி கதை}

தளபதி விஜய் உபயோகிக்கும் வார்த்தைகள் பலவற்றை இப்பாடலில் அருண் ராஜா காமராஜ் உபயோகித்துள்ளர். மிகவும் சிமிபிளாக உள்ளது. இப்பாடலுக்கு பக்க பலமாக அமைந்தது லோகி அவர்களின் லிரிக் வீடியோ. நெய்வேலி செலஃபீ தொடங்கி, அசத்தலான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ என கலக்கி உள்ளார் என்றால் அது மிகையாகாது.

இப்பாடல் ஹிட் அடிக்க முக்கிய காரணம் அதன் சிமிப்ளிசிட்டி தான். இதே போன்று ஏற்கனவே நம் கோலிவுட்டில் ஒரு பாடல் வெளியாகி உலகளவு ரீச் ஆனது.  நம்ம அனிருத், தனுஷ் காம்போவில் 3 படத்தின் உருவான “why திஸ் கொலவெறி” தான் அது. அதே ஸ்டைலில் குடித்து விட்டு பாடும் தங்கிலீஷ் விதத்தில் உருவானது தான் இந்த குட்டி கதையும். தனுஷின் பாடல் காதல் பற்றியது, ஆனால் விஜய்யின் இப்பாடல் வாழ்க்கை பற்றியது.

Leave a Comment