fbpx
Connect with us

Cinemapettai

மாஸ்டர் படம் இடைவேளைக்கு பிறகு வெறித்தனமா இருக்கும் என்ற பிரபலம்.. அப்போ பிகில் 2-னு சொல்லுங்க என்ற நெட்டிசன்கள்.. குசும்பு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் படம் இடைவேளைக்கு பிறகு வெறித்தனமா இருக்கும் என்ற பிரபலம்.. அப்போ பிகில் 2-னு சொல்லுங்க என்ற நெட்டிசன்கள்.. குசும்பு

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடியாக உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன. மேலும் விஜய்யின் நெருங்கிய நண்பர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் உருவாகி அனைத்து பாடல்களும் செம ஹிட் அடித்தது. ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது நிலவிவரும் கொரானா சூழ்நிலையால் படத்தின் வெளியீட்டில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த தேதியில் படத்தை வெளியிட முடியாமல் போன வருஷத்தை மாஸ்டர் படத்தில் நடித்த பிரபலங்கள் தங்களது ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பலரும் படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். இதை பயன்படுத்தி பல யூடியூப் சேனல்கள் தொடர்ந்து பிரபலங்களைப் பேட்டி எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் மாஸ்டர் படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றும் மேயாத மான் பட இயக்குனர் ரத்னா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளிக்கும் போது, மாஸ்டர் படம் இடைவேளைக்கு பிறகு படுபயங்கரமாக இருக்கும் என ரசிகர்களை உசுப்பேற்றினார்.

அவர் நல்ல முறையில் சொன்னதை நெட்டிசன்கள் தங்களது பங்குக்கு குசும்பு வேலையை காட்டி விட்டனர். பிகில் படம் முதல் பாதியை விட இரண்டாம் பாதி தான் நன்றாக இருந்தது என பல கருத்துக்கள் வெளிவந்தன. அதை ஒப்பிட்டு மாஸ்டர் படம் பிகில் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லுங்க என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

ஆனால் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு மாஸ்டர் படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று.

Continue Reading
To Top