Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டரால் கௌரி கிஷனை கேவலப்படுத்தும் நெட்டிசன்கள்.. இந்த ஒரு சிரிப்பு தான், டோட்டல் சீனும் குளோஸ்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்ததாக தகவல்கள் சினிமா தரப்பிலிருந்து வெளியாகின.
அதுமட்டுமில்லாமல் திரையரங்கில் படம் வெளியாகி ஒரு சில நாட்களிலேயே அமேசான் பிரைம் தளத்திலும் வெளியாகியது. இதனால் திரையரங்குகளில் மாஸ்டர் படம் பாதிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளை நாடி வருவதால் படம் வெற்றிகரமாக ஓடி வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
தற்போது மாஸ்டர் படத்தில்லிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் OTT தளத்திலிருந்து வெளியாகி வருகின்றன. மாஸ்டர் படத்தில் நடித்த சாந்தனு, மாளவிகா மோகன் மீம்ஸ் போட்டு தாக்கினர். அந்த வரிசையில் தற்போது கௌரி ஜி. கிஷன் இடம் பிடித்துள்ளார்.

master memes
காலேஜில் கௌரி ஜி. கிஷன் உடன் படிக்கும் இரண்டு இளைஞர்கள் தவறான முறையில் நடந்து கொள்வார்கள். அதனால் விஜய் அந்த இரண்டு இளைஞர்களையும் கண்ணத்தில் அடிப்பார். .அப்போது ஒரு இளைஞர் உணர்ச்சிவசப்பட்டு ஆமாம் நான் தான் தவறாக நடந்து கொண்டேன் என் நண்பன் தான் வீடியோ எடுத்தான் என கூறுவார்.

master memes
அந்த காட்சியில் கௌரி கிஷன் சிரித்து விடுவார் இதனை பார்த்த நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா. கவலையுடன் சீரியஸாக இருக்க வேண்டிய காட்சியில் கௌரி ஜி. கிஷன் சிரித்ததால் தான் லோகேஷ் கனகராஜ் படத்திலிருந்து இந்த காட்சியை நீக்கிவிட்டதாக சமூகவலை தளத்தில் கூறிவருகின்றனர்.

master memes
மேலும் கௌரி ஜி. கிஷன் தன்னுடன் கேவலமாக அவர்கள் நடந்து கொண்டனர் என சிரித்துவிட்டு கூறுவார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். அந்த வீடியோவில் பார்த்தால் கௌரி கிஷன் சிரிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
