Tamil Cinema News | சினிமா செய்திகள்
தியேட்டர்களில் கூட்டம் இல்லை, OTT-யில் ரீலீஸ் ஆகுமா மாஸ்டர்.? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்!
தமிழ் சினிமாவில் தன்னுடைய உழைப்பால் மட்டுமே முன்னேறி உச்சத்தில் இருப்பவர் தான் தளபதி விஜய். தற்போது இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படமும் பாக்ஸ் ஆபீசை அதிர வைத்து வருகிறது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி பல மாதங்களாக ரிலீசுக்காக காத்திருக்கும் படம் தான் மாஸ்டர்.
மேலும் ஏப்ரல் மாதமே திரையிடப்பட இருந்த இந்த படம் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இன்று வரை திரையிடப்படாமல் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளிவந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது மாஸ்டர் திரைப்படம் OTT-யில் வெளியாகாது என்றும் திரையரங்கில் தான் வெளியாகும் என்றும் ஏற்கனவே பலமுறை தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
ஆனாலும் கூட நேற்று முதல் மாஸ்டர் திரைப்படம் OTT-யில் தான் வெளியாக இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.
இதனால் கடுப்பான மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர் மீண்டும் இதுபற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக தியேட்டரில் மட்டும் தான் முதலில் பொங்கலுக்கு வெளிவரும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர்.
அதற்குப் பின்தான் OTT தளத்தில் மாஸ்டர் படத்தை வெளியிடுவோம் என்பதை உறுதி செய்துள்ளார், அதுவும் அமேசான் ப்ரைமில் வெளியிடுவோம் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர் படக்குழுவினர்.
மாஸ்டர் திரைப்படத்தைப் பற்றிய நல்ல செய்தி விரைவில் உங்களுக்கு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

master-cinemapettai
இதனால் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
