Connect with us
Cinemapettai

Cinemapettai

master-leaked

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒருவழியாக அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வந்த மாஸ்டர் படக்குழு.. தீபாவளிக்கு வாத்தி கம்மிங்

ஒரு படத்தை எடுத்து வைத்துவிட்டு அதை ரசிகர்களுக்கு காட்ட முடியாமல் தவிக்கும் தவிப்பை லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தியேட்டர் திறப்பில் இன்னமும் குளறுபடி நிலவுவதால் மட்டுமே மாஸ்டர் படத்தின் வெளியீடு தள்ளி செல்கிறது.

இருந்தாலும் நீண்ட நாட்களாக மாஸ்டர் படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லாததால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.

தங்களுடைய சோகங்களை டுவிட்டர் வாயிலாக மாஸ்டர் படக்குழுவிற்கு தெரிவித்த ரசிகர்களுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.

ஒருவழியாக மாஸ்டர் பட குழுவினர் இன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

lokesh-cinemapettai

lokesh-cinemapettai

அனேகமாக தீபாவளிக்கு மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகும் என அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

டுவிட்டர் லிங்கை பார்க்க கிளிக் செய்யவும்.

Continue Reading
To Top