Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டருடன் மல்லுக்கட்டும் ஈஸ்வரன்.. விஜய்க்கு போட்டியாக டீசர் நேரத்தை வெளியிட்ட சிம்பு
Published on
இந்த தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் போனது பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது.
அதேநேரம் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு நடிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது புதுப்படங்களின் அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி அன்று மாலை ஆறு மணிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தின் டீசரும் தீபாவளி அன்று காலை 04:32 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாக உள்ளதாம்.
ஒரு படத்தின் டீசர் அதிகாலையில் வெளியாவது இதுவே முதல் முறை என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
சிம்புவின் இந்த அதிரடி மாற்றத்தை கண்டு கோலிவுட் வட்டாரமே அதிர்ச்சியில் உள்ளது.

eswaran
