Connect with us
Cinemapettai

Cinemapettai

master-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எதார்த்த இயக்குனர் படத்தில் ஹீரோவாக மாஸ்டர் பட வில்லன் நடிகர்.. போடு இனி மஜாதான்!

வில்லன் நடிகர்கள் ஹீரோவாவது ஒன்றும் புதியதல்ல. ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் பட ஹீரோக்களாக வலம் வந்த பலரும் ஆரம்பத்தில் வில்லன் நடிகர்கள் தான். குறிப்பாக சரத்குமார், சத்யராஜ் ஆகியோரைச் சொல்லலாம்.

அந்த வகையில் சமீபகாலமாக ரகுவரனுக்கு பிறகு தன்னுடைய குரலால் மிரட்டும் வல்லமை கொண்டவராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் அர்ஜுன் தாஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்திலும் அர்ஜுன் தாஸ் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. இருந்தாலும் மாஸ்டரில் கைதி அளவுக்கு அர்ஜுன் தாஸுக்கு வேலை இல்லை என்பது ஒரு சோகமான விஷயம்.

ஆனால் மாஸ்டர் படம் அர்ஜுன் தாஸுக்கு மிகப்பெரிய வாழ்க்கையை கொடுத்துள்ளதாம். மாஸ்டர் படத்திற்கு பிறகு அர்ஜுன் தாஸுக்கு ஹீரோ வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதாம்.

ஏற்கனவே அந்தகாரம் படத்தில் நடித்திருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவின் எவர்கிரீன் எதார்த்த இயக்குனர் என பெயரெடுத்த வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

arjundas-vasanthabalan-cinemapettai

arjundas-vasanthabalan-cinemapettai

இதனை வசந்தபாலன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படத்தை பற்றிய மற்ற விவரங்கள் அனைத்தும் விரைவில் வெளியிடப் போவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
To Top