Connect with us
Cinemapettai

Cinemapettai

biggboss-tamil

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் 5 நிகழ்ச்சிக்கு வரும் மாஸ்டர் பட நடிகை.. எகிறும் எதிர்பார்ப்புகள்

இப்போதைக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சியில் ரியாலிட்டி கொஞ்சம்கூட இல்லை என தெரிந்தும் அதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக தான் இருக்கின்றனர்.

ஹிந்தியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தென்னிந்திய சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. தென்னிந்திய மொழிகளில் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. விரைவில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கான வேலைகளும் தொடங்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

எப்போதுமே தமிழில் தொடங்கும் அதே நேரத்தில்தான் தெலுங்கிலும் தொடங்குவார்கள். கடந்த முறை கூட தமிழ், தெலுங்கு இரண்டு நிகழ்ச்சிகளையும் சேர்த்து ஒரே எபிசோடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை போல தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதில் மாஸ்டர் படத்தில் நடித்த சுரேகா வாணி என்பவர் உள்ளே செல்ல உள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் இதுகுறித்து சுரேகா வாணி தரப்பில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கான்செப்ட் சுத்தமாக பிடிக்கவில்லை எனவும் அதனால் நான் கலந்துகொள்ள மாட்டேன் எனக் சுரேகா கூறியதாக ஒரு செய்தி வெளியானது.

surekha-vani-cinemapettai

surekha-vani-cinemapettai

Continue Reading
To Top