Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாழ்த்துக்கள் கூறி தனுஷ் பட வாய்ப்பை தட்டி தூக்கிய பிரபலம்.. வயித்தெரிச்சலில் முன்னணி நடிகைகள்
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகன். இதை தொடர்ந்து இவர் தளபதிக்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார் என்பதும் நாம் அறிந்ததே.
இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகன் தனுஷின் 43 ஆவது படத்தில் நடிக்க உள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். இவர் கர்ணன் என்ற படத்தை தொடர்ந்து தன்னுடைய 43 வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார்.
ஏற்கனவே இந்தப் படத்தை பிரபல இயக்குனரான கார்த்திக் நரேன் இயக்க உள்ளதாகவும், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகன் தான் தனுஷின் இந்த படத்திற்கு ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாளவிகா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் அந்த பதிவில் நடிகை மாளவிகா, ‘ சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர்களுடன் நடிப்பதே என்னுடைய கொள்கை. இறுதியாக உங்களுடன் இணை போவதில் பெருமை அடைகிறேன். உங்களுடன் இணைவது எனக்கு கிடைத்த கவுரவம்’ என்று தனுஷைப் பற்றியும், சத்யஜோதி பிலிம்ஸ் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

malavika-mohanan-dhanush-tweet
எனவே, இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

malavika mohananan in D 43
