தளபதி 65 படத்தில் இணைந்த மாஸ்டர் பட பிரபலம்.. விஜய்க்கு அவரை ரொம்ப பிடித்து விட்டதாம்!

thalapathy65-cinemapettai
thalapathy65-cinemapettai

தளபதி விஜய்யுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக தளபதி 65 படத்தில் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. வரவர விஜய்யும் அஜித் மாதிரி ஆகி விட்டார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

அஜித் தான் ஒருவரை பிடித்து விட்டால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார். அந்த முறையை தற்போது விஜய்யும் கடைபிடித்து வருகிறாராம். அந்த வகையில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் அட்டகாசம் செய்த குட்டி பிரபலம் ஒருவர் தளபதி65 படத்திலும் இணைந்து விட்டார்.

அவர் வேறு யாரும் இல்லை. பூவையார் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் பூவையார் என்ற சிறுவன். கானா பாடல் பாடி பிரபலமான இவரது பாடலை கேட்க பல ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் பூவையாரின் பாடல்கள் தளபதி விஜய்க்கு மிகவும் பிடிக்குமாம். முதலில் பிகில் படத்தில் அட்லீயின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் பூவையார். முதல் படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய வேடம் எதுவும் இல்லையென்றாலும் தளபதியுடன் நெருக்கமாகி விட்டாராம்.

அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் எல்லாம் கொடுத்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் பூவையாரை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டே சுற்றி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பூவையார் ஒப்பந்தமாகியுள்ளாராம். இனி தொடர்ந்து விஜய் படங்களில் பூவையாரை பார்க்கலாம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

vijay-poovaiyar-cinemapettai
vijay-poovaiyar-cinemapettai
Advertisement Amazon Prime Banner