fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யின் மாஸ்டர் செய்த மெகா சாதனை! அனிருத் மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெரிசு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் மாஸ்டர் செய்த மெகா சாதனை! அனிருத் மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெரிசு

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் கோடை விடுமுறைக்கு வெளியாக இருந்த நிலையில் சகொரானாவின் காரணமாக தள்ளிச் சென்று கொண்டே இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பாடல்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என அனைத்துமே இந்திய அளவில் ஹிட். மாஸ்டர் பட ட்ரெய்லரை வெளியிடாமல் படக்குழுவினர் நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழ் சினிமா உலகம் தற்போது முடங்கியுள்ள நிலையில் தியேட்டர் பிஸினஸும் முடங்கிவிட்டது. மீண்டும் திரையரங்குகளுக்கு மக்களை கொண்டுவர சூரரைப்போற்று மற்றும் மாஸ்டர் படங்கள் காரணமாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சூர்யா படத்தை அமேசானுக்கு விற்று விட்டார். மாஸ்டர் படமும் விற்கப்படும் சூழலில் தான் உள்ளது என்கின்றனர், ஆனால் படக்குழு மறுத்து வருகிறது.

ஏற்கனவே நெய்வேலி செல்பி ட்விட்டரில் ட்விட்டரில் அதிகம் ரீட்வீட் பெற்று சாதனை படைத்தது நாம் அறிந்ததே. இப்படத்தின் பாடல்கள் யூ ட்யூபில் பல மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

வாத்தி கம்மிங் – 74 மில்லியன் Views
குட்டி ஸ்டோரி – 71 மில்லியன் Views
வாத்தி ரெய்டு – 18 மில்லியன் Views
அந்த கண்ண பார்த்தாக்க – 11 மில்லியின் Views
பொளக்கட்டும் பரபர – 6.5 மில்லியன் Views

Continue Reading
To Top