இளமை துள்ளும் தளபதி.. மாஸ் பண்ணும் மாஸ்டர் படத்தின் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ பாடல்

தளபதி விஜய் முதன்முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக இளம் நாயகி மாளவிகா மேனன் நடித்துள்ளார். மேலும் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தில் நடித்திருப்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

கத்தி படத்திற்கு பிறகு அனிருத் இசை அமைப்பதால் மாஸ்டர் படத்திற்கு எதிர்பார்ப்பு இரட்டிப்பாகி உள்ளது. சமீபத்தில் நடந்துமுடிந்த காதலர் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு ஒரு குட்டிக்கதை பாடலை வெளியிட்டது.

தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் “ஒரு குட்டி கதை” சிங்கிள் வெளிவந்த சென்சேஷனல் மற்றும் வைரல் ஹிட் அடித்தது. அனிருத் இசையமைக்க தளபதி விஜய் அவர்களே பாட, இப்பாடல் முழுவதும் பாசிட்டிவ் பீல் பாட்டரியே உள்ளது.

தளபதி விஜய் உபயோகிக்கும் வார்த்தைகள் பலவற்றை இப்பாடலில் அருண் ராஜா காமராஜ் உபயோகித்துள்ளர், மிகவும் சிமிபிளாக உள்ளது. இப்பாடலுக்கு பக்க பலமாக அமைந்தது லோகி அவர்களின் லிரிக் வீடியோ. இப்பாடல் ஹிட் அடிக்க முக்கிய காரணம் அதன் சிமிப்ளிசிட்டி தான்.

பின் மாஸ்டர் படத்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடல் இணையதளத்தில் புரட்டிப் போட்டது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சிம்பிளா சூப்பரா நடைபெற்றது.

தற்போது இந்த படத்தின் ரொமான்டிக் சாங் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ லிரிகல் விடியோ வெளிவந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலின் காட்சிகளைப் பார்க்கும் போது  தளபதிக்கு வயது குறையவேயில்லை, செம ஸ்டைலிஷா இருப்பதால் ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த பாடல் வரிகள் ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றனர்.

Leave a Comment