fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சூரரைப்போற்று அடுத்து மாஸ்டருக்கு மல்லு கட்டும் OTT தளங்கள்.. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் கார்ப்பரேட்

ott-master

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூரரைப்போற்று அடுத்து மாஸ்டருக்கு மல்லு கட்டும் OTT தளங்கள்.. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் கார்ப்பரேட்

யாருமே எதிர்பார்க்காத அளவில் சூரரைப்போற்று படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசானில் வெளியிடப்படும் என்று சூர்யா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன முக்கியமாக இத்தனை வருடங்கள் சுதா கொங்கரா இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார், அந்த உழைப்பு மக்களிடம் உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் உழைத்த அனைத்து ஊழியர்களின் உழைப்பு வீணாகி விடக்கூடாது என்பதற்காக மட்டுமே ஒரு தயாரிப்பாளராக நான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று சூரியா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த படம் கிட்டத்தட்ட 60 கோடி அளவில் வியாபாரம் ஆகியுள்ளது, இந்த நிலையில் சூர்யா 5 கோடி ரூபாய் தொகையை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்துவிட்டார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க மற்றொருபுறம் திரையரங்கு உரிமையாளர்கள் கொதித்தெழுந்து உள்ளனர். ஏனென்றால் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள்வந்தாள் திரைப்படம் OTT தளத்தில் வரும் போதே பெரும் சர்ச்சையானது. அப்போதே சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், சூரரைப்போற்று OTT-தளத்தில் உங்களால் வெளியிட முடியுமா.? என்று சவால் விட்டனர்.

இப்படி திரையரங்கு உரிமையாளர்கள் வெறுப்பேற்றி விட்டதால், சூர்யா இந்த முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. தற்போது OTT-தலமான கார்ப்பரேட் நிறுவனம் மாஸ்டருக்கு வலை வீசி வருகிறது. ஏன் என்றால் முன்னணி நடிகர்களின் படம் OTT-தளத்தில் வரத் தொடங்கி விட்டால், இனி மற்ற நடிகர்களின் படத்தை ஈசியாக அடிமாட்டு விலைக்கு கைப்பற்றி விடலாம் என்பதுதான் அவர்களின் குறிக்கோள்.

இந்த நிலையில் திரையரங்குகள் ஆயிரக்கணக்கில் மூடப்படும் சூழ்நிலை ஏற்படும், தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்படும், திரைத் துறையில் பெரும் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாமல் கார்ப்பரேட்க்கு சினிமா துறையினர் அடிமையாகும் சூழ்நிலை கண்டிப்பாக வரும் என்பதுதான் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் தியேட்டர்கள் திறந்தாலும் ரசிகர்கள் தியேட்டர்களில் வந்து பார்ப்பார்கள் என்பது சந்தேகம்தான்.

இதனால் மாஸ்டர் படமும் OTT-தளத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம். சூரரைப்போற்று படத்துக்கு நடந்த சூழ்ச்சி மாஸ்டருக்கும் நடக்கும் என்று சினிமா பிரபலங்கள் மிரண்டு போயுள்ளனர். நாளுக்கு நாள் மாஸ்டர் படத்திற்காக முதலீடு செய்த காசுக்காண வட்டி அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனால் நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் இடையே பேச்சுவார்த்தையில் கடும்போட்டி நிலவி வருகிறது.

இந்த படத்திற்க்காக உழைத்த கலைஞர்களின் உழைப்பு வீணாகி விடக்கூடாது என்று தயாரிப்பாளர் தரப்பு யோசித்தால் கார்ப்பரேட்களின் காலில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் மாஸ்டர் படமும் விரைவில் OTT-தளத்தில் வந்துவிடுமோ என விஜய் ரசிகர்கள் பெரும் பயத்தில் உள்ளனர். சூரரைப்போற்று படம் OTT-தளத்தில் வரும் என்பதை தெரிந்தவுடன் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் எனபது தான் நிதர்சனமான உண்மை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top