விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

’மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம் என்பதால் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார்கள்.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படத்தின் டீசருக்காகப் பலரும் காத்திருந்தனர்.  மெர்சல் படத்தின் டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டு உலக சாதனை படைத்தது.

மெர்சல் என்ற பெயரை விளம்பரத்துக்குப் பயன்படுத்த, “மெர்சல்” படக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.இந்த நிலையில் ராஜேந்திரன் என்ற திரைப்பட தயாரிப்பாளர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.

அதில், ‘நான் ஏற்கெனவே 2014ல் ‘மெர்சலாகிட்டேன்’ என்ற பெயரில் ஒரு படத்தை துவக்கினேன். அந்தப்படம் தயாரிப்பில் உள்ள நிலையில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ என்ற படம் வெளிவர உள்ளது. இந்தப்படம் வந்தால் என் படம் பாதிக்கப்படும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை வரும் அக்டோபர் 3-ம் தேதி ஒத்திவைத்தவர், அதுவரை ‘மெர்சல் படத்தின் விளம்பரங்கள் எதுவும் வெளியிடக்கூடாது’ என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்.

மெர்சல் என்ற பெயரை பயன்படுத்தி விளம்பரப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், படத்தின் பெயரை மாற்ற படக்குழு
திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, சுறா படத்தில் படத்தின் டைட்டிலுக்கு கீழே SURA – THE LEADER என்றும், தலைவா படத்தில் TIME TO LEAD என்றும் குறிப்பிட்டு
கடுமையான அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்தார் நடிகர் விஜய்.

இந்நிலையில், மெர்சல் படத்தின் டைட்டிலுக்கு பிரச்னை வந்திருந்தாலும் ‘ஆளப்போறான் தமிழன்’ என்று பெயர் வைத்தால் விஜயின் அரசியல்
எதிர்பார்ப்புகளுக்கு தீனிபோடும் வகையில் இருக்கும் என்பதால் கெட்டதிலும் ஒரு பெரிய நல்லது என விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் இருக்கும் அள்விற்கு ரசிகர்கள் பலம் கேரளாவிலும் உள்ளனர். அவருடைய பல படங்கள் கேரளாவில் ரூ 10 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதிலும் தெறி ரூ 16.5 கோடி வரை வசூல் செய்தது, மெர்சல் கண்டிப்பாக ரூ 20 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் கேரளாவில் மெர்சல் ஸ்பெஷல் ஷோ மட்டுமே அதாவது அதிகாலை காட்சிகள் மட்டுமே 50க்கு மேல் ஏற்பாடு செய்துள்ளார்களாம்.

இவை இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது, இதற்கு முன் எந்த ஒரு தமிழ் நடிகருக்கும் இந்த அளவிற்கு ஸ்பெஷல் ஷோ வைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.