காற்று வெளியிடை படத்துக்குப் பின்னர் மணிரத்னம் இயக்கிவரும் படம் செக்கச்சிவந்த வானம். மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில், அர்விந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.

jyothika
jyothika

முக்கியமான கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் மணிரத்னமே இந்த படத்தைத் தயாரித்துள்ளார். துபாயில் விறுவிறுப்பாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில், அர்விந்த் சாமி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்கள் போர்ஷன்களை ஏற்கனவே முடித்துக் கொடுத்து விட்டனர்.

#CCV #chekkachivanthavaanam #ShootingSpot #Manirathinam #Jyothika #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இந்தநிலையில், படப்பிடிப்பை விரைவில் முடித்து இந்தாண்டே படத்தைத் திரைக்குக் கொண்டுவரும் முனைப்பில் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். நீண்டநாட்களுக்குப் பின்னர் சிம்பு நடிக்கும் படம், பெரிய ஸ்டார்கள் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் என பல்வேறு தகவல்களால் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றன.

#STR in #CCV #Dubai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இந்தநிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் வகையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ஷீட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். பொதுவாக மணிரத்னம் படம் என்றாலே ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளிவருவது கடினம். ஆனால், செக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் டெம்போவை ஏற்றியது.

vijay-sethupathi
vijay-sethupathi

அந்தவகையில், ஜோதிகாவுக்கு காட்சியை மணிரத்னம் விவரிப்பது மற்றும் பெரிய கட்டிடங்கள் பின்னணியில் சிம்பு ஸ்டைலாகக் கண்ணாடியுடன் போஸ் கொடுப்பது என மேலும் சில புகைப்படங்களை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.