Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இசைஞானியின் பயோபிக்கல் நடிக்கப் போகும் மாஸ் ஹீரோ.. இயக்கப் போவது நம்ம ஆட்கள் இல்ல

கூடிய விரைவில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தை எதிர்பார்க்கலாம்.

illaiyaraja

Music Director Illaiyaraja: தற்போதைய காலகட்டத்தின் படி சினிமாவில் பல்வேறு விஷயங்களை புதிதாக டிரெண்டாக்கி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே வெற்றியடைந்த படங்களின் தொடர்கதையாக இரண்டாம் பாகம், பழைய ஹிட் படங்களை சில மாற்றங்கள் செய்து ரீ ரிலீஸ் பண்ணுவது, போன்ற விஷயங்கள் தொடர்கதையாக வருகிறது. அதில் ஒன்றுதான் பயோபிக் திரைப்படம்.

அதாவது முக்கியமான பிரபலங்களின் வாழ்க்கையை வரலாற்று திரைப்படங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எடுத்து வரக்கூடிய படங்களும் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

Also read: இளையராஜா இப்படி ஒரு மனுசனா.? மொத்த வாழ்க்கையும் புட்டு புட்டு வைத்த ஏ ஆர் ரகுமான்

அதுவும் இளையராஜாவின் பயோபிக் படத்தை எடுப்பதற்கு தமிழ் இயக்குனர்கள் யாருக்கும் தோன்றவில்லை. இதை எடுக்கப் போவது பிரபல பாலிவுட் இயக்குனர் ஆர் பால்கி என்பவர். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் என்னுடைய நீண்ட நாள் கனவு இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தை எடுப்பது தான்.

அத்துடன் மூன்று தலைமுறைகளாக 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து தலை சிறந்த இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர். இப்படிப்பட்ட இவருடைய வாழ்க்கை வரலாறு படத்தை நான் எடுக்க போகிறேன். அப்படி நான் எடுக்கும் பொழுது கண்டிப்பாக இதில் இந்த ஹீரோவை மட்டும்தான் நடிக்க வைப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Also read: புகழின் உச்சி, இளையராஜாவை காலி செய்த பாலச்சந்தர் எடுத்த விபரீத முடிவு.. வரலாற்றை திரும்பி பார்க்க செய்த சம்பவம்

அதற்கு காரணம் இளையராஜாவுக்கு நான் எவ்வளவு பெரிய ரசிகனோ, அதேபோல் இந்த நடிகரும் இளையராஜாவின் மிகப்பெரிய தீவிர ரசிகர். அதனால் இவரை நடிக்க வைத்தால் மட்டுமே அது சரியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அந்த நடிகர் வேறு யாருமில்லை தமிழில் மாஸ் ஹீரோவாக அனைவரும் கொண்டாடப்பட்டு வரும் தனுஷ் தான்.

ஏற்கனவே இயக்குனர் பால்கி, தனுஷை வைத்து 2015 ஆம் ஆண்டு “ஷமிதாப்” என்ற படத்தை எடுத்திருக்கிறார். அப்பொழுது இந்த படத்திற்கு இளையராஜாவை தான் இசையமைக்க வைத்திருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் பால்கிக்கு இளையராஜா என்றால் ரொம்பவே பிடித்தமான ஒரு இசையமைப்பாளர். அதனால் கூடிய விரைவில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தை எதிர்பார்க்கலாம்.

Also read: இளையராஜா வரும்போது தம்மடித்த நடிகர்.. பிறவிப் பணக்காரன் என்பதால் வந்த ஆணவம்

Continue Reading
To Top