விக்ரம் படத்தில் ரகசியமாக வைக்கப்பட்ட மாஸ் நடிகர்.. தரமான சம்பவம் செய்த லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது முதல் முறையாக உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் இருவரும் மாறுபட்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் கமலஹாசன் பிளாஷ்பேக் காட்சிகளில் இளவயது கமல் போலவே தோற்றமளிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதற்காக 10 கோடி வரை செலவாகியுள்ளது. விக்ரம் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு மெனக்கெட்டு செய்துள்ளார்.

இப்படத்திற்கான காப்புரிமையும் டெல்லி சென்ற பெற்றுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் மாஸ் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. அதாவது கேமியோ தோற்றத்தில் நடிகர் சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள இயக்குனர் அமல் நீர்த் இயக்கத்தில் கமல், சூர்யா இருவரும் ஒரே படத்தில் நடிக்க உள்ளார்கள் என்ற தகவல் முன்பே வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது அதற்கு முன்பாகவே லோகேஷ் கனகராஜ் தனது விக்ரம் படத்தில் சூர்யா, கமல் இருவரையும் ஒரே திரையில் காண்பித்து ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.

சூர்யா குசேலன், மன்மத அன்பு, அவன் இவன், சென்னையில் ஒரு நாள், கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்களில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார். தற்போது பாலாவின் இயக்கத்தில் தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கயுள்ளார்.

தற்போது படப்பிடிப்புகளில் சூர்யா பிஸியாக உள்ள போதிலும் கமலஹாசனின் படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் விக்ரம் படம் வருகிற ஜூன் 3 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படம் கமல் ரசிகர்களுக்கு மட்டுமன்றி சூர்யா ரசிகர்களுக்கும் விருந்தாக அமைய உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்