காமென்வெல்த் போட்டியில் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மேரி கோம் !

கோல்ட் கோஸ்ட்

ஆஸ்திரேலியாவில் 21-வது காமென்வெல்த் போட்டிகள் கடந்த 10 நடந்து வருகின்றன. இதில் மகளிருக்கான குத்துச்சண்டை (45- 48 கிலோ) இறுதி போட்டி நேற்று நடந்தது. இந்தியாவின் மேரி கோமை எதிர்த்து வடக்கு அயர்லாந்து வீராங்கனை கிறிஸ்டினா ஓ ஹாரா மோதினார்.

தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய மேரி கோம் 5 – 0 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்று இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்று தந்துள்ளார். முதல் சுற்றில் சற்றே தடுமாறினாலும், 35 வயதாகும் சீனியர் வீரரான மேரி அடுத்தடுத்த சுற்றில் 22 வயது இளம் வீராங்கனை எளிதில் வீழ்த்தினார்.

Mary kom

காமென்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மேரி கோம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு கூட ஒலிம்பிக்கில் வெண்கலம், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

More Cinema News: