ரோஹித்தை அப்பவே கணித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்.. பெரிய ஜோதிடரா இருப்பாரோ

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது கேப்டன் பதவியை ஏற்று வழி நடத்தி வரும் ரோகித் சர்மா பல வெற்றிகளை குவித்து வருகிறார். தற்போது நடந்து முடிந்த மேற்கு இந்திய அணிக்கு எதிரான போட்டிகளை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஒயிட் வாஷ் செய்து கோப்பையை கைப்பற்றியது.

இதன் மூலம் தனது கேப்டன் பொறுப்பை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார் ரோகித். அவருக்கு இந்திய அணியின் உள்ள இளம் படை நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.

ரோகித் சர்மா பல போட்டிகள் ஆடிய அனுபவம் வாய்ந்த பின்னரே இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அதாவது தனது 34வது வயதில் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதுவே இவருக்கு அசுரபலம்.

ரோஹித் சர்மாவை பற்றி ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தற்போது பழைய நினைவை ஒன்றை பகிர்ந்துள்ளார். 13 வருடத்திற்கு முன்னரே நான் இதை கணித்தது தான் என்று பெருமையாக பேசி இருக்கிறார்.

2009ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் இவர்கள் இருவரும் விளையாடி வந்தனர். அந்த அணியின் கேப்டனாக கில்கிறிஸ்ட் இருந்தார். அவருக்கு துணை கேப்டனாக அப்போது ரோகித் பங்காற்றினார்.

அப்போது கில்கிறிஸ்ட் இல்லாத நேரத்தில் ரோஹித் சர்மா அபாரமாக செயல்பட்டு, அவரையும் தாண்டி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போதே ரோஹித் சர்மாவை கணித்துள்ளார் கில்கிறிஸ்ட். இவர் இந்திய அணியை வருங்காலத்தில் வழிநடத்தக் கூடிய வெற்றிகரமான கேப்டன் என்று. ஒருவேளை ஆடம் கில்கிறிஸ்ட் பெரிய ஜோதிடராக இருப்பாரோ?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்